மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

குடிமைப்பணி பிரதான தேர்வு 2025 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 12 NOV 2025 1:02PM by PIB Chennai

இந்திய நிர்வாகப் பணி, இந்திய வெளியுறவு பணி, இந்தியக் காவல் பணி மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளுக்கு (குரூப் ஏ, குரூப் பி) பணிகளுக்கு தேர்ந்தெடுப்பதற்காக 2025 ஆகஸ்ட் 22 முதல் 31 வரை மத்திய குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணி பிரதான தேர்வு 2025 முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆளுமைத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயது, கல்வித் தகுதி, சாதி, பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், மாற்றுத்திறனாளி ஆகியவற்றுக்கான அசல் சான்றிதழ்களை  ஆளுமைத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இந்த ஆவணங்களை தயாராக வைத்திருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இட ஒதுக்கீடு மற்றும் தளர்வு கோருபவர்கள் எஸ்சி எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ், பிடபிள்யூபிடி, முன்னாள் படை வீரர் ஆகியவற்றுக்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இச்சான்றிதழ்கள் குடிமைப்பணி  முதல் நிலைத் தேர்வு 2025 நடைபெற்ற 21.02.2025-க்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுதில்லி ஷாஜஹான் சாலையில் உள்ள மத்திய குடிமைப் பணித் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆளுமைத் தேர்வுகளின் தேதி குறித்து அறிவிக்கப்படும்.  இதற்கான கடிதங்களை https://www.upsc.gov.in & https://www.upsconline.gov.in. என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அவ்வாறு இந்த மின் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் உடனடியாக ஆணையத்தின் அலுவலகத்தை கடிதம் மூலமாகவோ அல்லது 011-23385271, 011-23381125 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது  011-23387310, 011-23384472 என்ற எண்ணிற்கு தொலைநகல் மூலமாகவோ அல்லது csm-upsc[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் மூலம் ஆளுமைத் தேர்வுக்காக காகித கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189119   

***

SS/IR/KPG/KR

 


(Release ID: 2189250) Visitor Counter : 17