சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
செவிலியர் கல்வியை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான பயிலரங்கிற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
12 NOV 2025 12:39PM by PIB Chennai
இந்தியாவில் செவிலியர் கொள்கை முன்னுரிமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த தேசிய ஆலோசனை மற்றும் அனுபவ பகிர்வு குறித்த 3 நாள் பயிலரங்கிற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சுகாதாரத்திற்கான அமைப்பான ஜெபைகோவுடன் இணைந்து நடத்துகிறது.
செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணியாளர் துறையில் மேம்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை விவாதத்தை வலுப்படுத்துவதற்கு இப்பயிலரங்கு நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், செவிலித்துறை கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். செவிலியர் நிர்வாகம், கல்வி மற்றும் பணி மேலாண்மையை வலுப்படுத்த புதுமையான முறைகளை பகிர்ந்து கொள்ளவும் வளர்ந்து வரும் சவால்களைக் கண்டறியவும், தற்போதைய முன்முயற்சிகளை ஆய்வு செய்வதையும் இப்பயிலரங்கில் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189107
***
SS/IR/KPG/KR
(Release ID: 2189248)
Visitor Counter : 7