PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்திய நெடுஞ்சாலைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது

Posted On: 11 NOV 2025 1:54PM by PIB Chennai

இந்திய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 2025 மார்ச் நிலவரப்படி இந்தியாவின் சாலை கட்டமைப்பு 63 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமானதாகும். இது உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பாகும்.  இத்துடன் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 2013-14-ம் ஆண்டில் 91,287 கி.மீ. ஆக இருந்த நிலையில், அது தற்போது 60 சதவீதம் அதிகரித்து 1,46,204 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் 2025 ஆண்டுக்கு இடையே நாட்டில் 54,917 கி.மீ. தொலைவிற்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிடல் முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது வரை அனைத்து கட்டத்திலும் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது. மின்னணு சுங்க கட்டண வசூல் முறையான ஃபாஸ்டேக்கை 8 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் வர்த்தகம் அல்லாத வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ஒருமுறை மட்டுமே ரூ.3000 பெறப்படுவதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் உள்ள 200 முறை சுங்கச்சாவடியை கடப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. ராஜ்மார்க்யாத்ரா செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணைய தளம் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் இவ்வசதியை பெறலாம். ஃபாஸ்டேக் ஆண்டு கட்டண முறை 2025 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது முதல் நாடு முழுவதும் இரண்டு மாதங்களில் 5.67 கோடி பரிவர்த்தனைகளுடன் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188705  

***

SS/IR/AG/KR


(Release ID: 2188869) Visitor Counter : 16