பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணியாளர் மற்றும் பயிற்சி துறை, சிறப்பு இயக்கம் 5.0 நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது

Posted On: 11 NOV 2025 1:28PM by PIB Chennai

பணியாளர் மற்றும் பயிற்சி துறை, அதன் சார்பு அலுவலகங்களுடன் இணைந்து சிறப்பு இயக்கம் 5.0-ல் பங்கேற்று அதன் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தது. 2025 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற இப்பணிகளின் போது ஆவணங்களை ஆய்வு செய்து களைதல், நிலுவைகளை குறைத்தல், பழைய பொருட்களை அகற்றுதல், துறை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விரைவான முடிவெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

நிலுவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 16 குறிப்புகளுக்கும் 1,842 பொது மக்களின் குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் 12 குறிப்புகளுக்கும் 343 பொது மக்களின் குறைகள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. 1,15,576 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 97,188 கோப்புகள் களையப்பட்டது. 1,28,306 மின் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 76,378 மின் கோப்புகள் நீக்கப்பட்டது. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.33,15,649 வருவாய் கிடைத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188693  

***

SS/IR/AG/RK


(Release ID: 2188791) Visitor Counter : 8