குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மைசூரில் உள்ள ஜேஎஸ்எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் 16-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

பல்துறை கற்றல் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதில் புதிய தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது - குடியரசுத் துணைத்தலைவர்

Posted On: 09 NOV 2025 5:46PM by PIB Chennai

மைசூருவில் இன்று (09.11.2025) நடைபெற்ற ஜேஎஸ்எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் 16-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், பட்டம் பெறும் ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான திறமைகளை அடையாளம் கண்டு இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சுவாமி விவேகானந்தர் கூறியபடி இலக்கை அடையும் வரை ஓயக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

பல்துறை கற்றல் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதில்  புதிய தேசிய கல்விக் கொள்கை முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் சமூக ஊடகங்களை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்

அறிவே உண்மையான செல்வம் என்று அவர் கூறினார். பழங்கால ஞானத்தின் ஒளியுடன், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய உறுதியுடன் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

இந்த பட்டமளிப்பு விழாவின் போது மொத்தம் 2,925 மாணவர்களுக்கு பட்டங்கள், பட்டயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், ஜேஎஸ்எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் வேந்தர் ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகாசுவாமிஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2188048)

SS/PLM/RJ


(Release ID: 2188072) Visitor Counter : 9