பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை சாகச நிகழ்ச்சி குவஹாத்தியில் இன்று நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2025 4:26PM by PIB Chennai

இந்திய விமானப்படை தனது 93-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று (நவம்பர் 09, 2025) குவஹாத்தியில் பிரம்மபுத்திரா நதிப் பகுதியில் அற்புதமான சாகச நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அசாம் ஆளுநர் திரு லட்சுமண பிரசாத் ஆச்சார்யா கலந்து கொண்டார். அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, விமானப்படை தலைமை தளபதி பி சிங், விமானப்படை மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

"தவறாதது, அழியாதது, துல்லியமானது" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு கண்காட்சி நடைபெற்றது.

பிரம்மபுத்திரா நதிக் கரைப் பகுதியான லச்சித் காட் வழியாக பறந்து சென்ற விமானங்கள் குவஹாத்தியின் துடிப்பான வண்ணங்களுக்கு மேலும் மெருகூட்டின. ஹெலிகாப்டர்களும், போக்குவரத்து விமானங்களும், போர் விமானங்களும் இதில் பங்கேற்றன. தேஜஸ், சுகோய் 30, ரஃபேல் ஆகியவை சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தன.

இந்த சாகச நிகழ்ச்சி வடகிழக்குப் பகுதி இளைஞர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியது. இது இளைஞர்கள் விமானப்படையில் இணைந்து, தேச சேவைக்கு பங்களிக்க தூண்டுவதாகவும் அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188023

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2188049) வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese