பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருவனந்தபுரத்தில் பிரமாண்டமான சாகசங்களுடன் கடற்படை தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது

Posted On: 08 NOV 2025 4:11PM by PIB Chennai

திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில் டிசம்பர் 04, 2025 அன்று பிரமாண்டமான சாகச நிகழ்ச்சிகளுடன் கடற்படை தினத்தை   கொண்டாட இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

முக்கிய கடற்படைத் தளங்கள் அல்லாத பிற பகுதிகளில் கடற்படை தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான இந்திய கடற்படையின் தொடர் முயற்சியாக இது அமைந்துள்ளது. முன்னதாக, கடற்படை தினம் ஒடிசா மாநிலம் பூரி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் நடைபெற்றது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி நாட்டு மக்களுக்கு இந்திய கடற்படையின் கள நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களை ஒருசேரக்  காண்பதற்கான தனித்துவ வாய்ப்பை வழங்கும். இது இந்திய கடற்படையின் அதிநவீன செயல்பாட்டு தளங்களையும், மகாசாகர் எனப்படும் பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்புவளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் கீழ் செய்யல்படுத்தப்படும். இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் 'பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு உகந்த நாடாகவும்' அதன் உறுதியான செயல்பாடுகளையும் வெளிப்படுத்தும். இந்த நிகழ்ச்சி, இந்தியக் கடற்படையின் வலிமையான போர் திறன், தொழில்நுட்ப சிறப்பம்சம், செயல்பாட்டுத் தயார்நிலையை உயிர்ப்பிக்கும் அதே வேளையில், நாட்டின் வளர்ந்து வரும் கடல்சார் வலிமை மற்றும் தன்னம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் அமையும்.

தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த சாகச நிகழ்ச்சி, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டும் வகையில் அமையவுள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் செயல்திறன் குறித்தும், நவீன, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான கடற்படையை உருவாக்குவதற்கான 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டத்தின் கீழ் கடற்படையின் தொடர் முயற்சிகளை உள்ளடக்கியுதாகவும் இருக்கும். இந்த நிகழ்ச்சி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இருந்த கடற்படையின் தயார்நிலை மற்றும் தாக்குதல் தடுப்பு திறனை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கும். துல்லியம், வேகம் மற்றும் வலிமையான தாக்கும் திறனை இது மீண்டும் உறுதிப்படுத்தும். நாட்டின் இறையாண்மை மற்றும் கடல்சார் நலன்களைப் பாதுகாக்கும் இந்திய கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்களின் தொழில்முறை, ஒழுக்கம் மற்றும் துணிச்சல் போன்றவற்றிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சாகச நிகழ்சசி நடைபெறவுள்ளது.

1971 - ம் ஆண்டு இந்தோ-பாகிஸ்தான் போரின் போது, எதிரிகளின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அரண்களுக்கு ஒரு உறுதியான அச்ச உணர்வை  ஏற்படுத்திய கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்தும் இந்த கடற்படை தினம் நினைவூட்டும் விதமாக அமைகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187809

***

AD/SV/RJ


(Release ID: 2187871) Visitor Counter : 5