குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நவம்பர் 9 அன்று கர்நாடகா செல்கிறார்
Posted On:
08 NOV 2025 2:12PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 2025 நவம்பர் 9 அன்று கர்நாடகா மாநிலத்திற்கு முதல்முறையாக பயணம் மேற்கொள்கிறார்.
ஹாசன் நகரில் ஷ்ரவணபெலகோலாவில் உள்ள மரியாதைக்குரிய சமண மதத் துறவியும், ஆன்மீகத் தலைவருமான பரம்புஜ்ய ஆச்சார்யா ஸ்ரீ 108 சாந்தி சாகர் மகாராஜ் - ன் நினைவஞ்சலியில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி, 1925 - ம் ஆண்டு சரித்திர சக்கரவர்த்தி ஆச்சார்ய ஸ்ரீ 108 சாந்தி சாகர் மகாராஜி - ன் முதல் ஷ்ரவணபெலகோலா வருகையின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது.
இதனையடுத்து ஆச்சார்ய ஸ்ரீ சாந்தி சாகர் மகாராஜின் திருவுருவச் சிலை நிறுவும் விழாவிலும், நான்காவது மலைக்கு பெயரிடும் விழாவிலும் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
பின்னர், சுத்தூர் ஸ்ரீஷேத்திரத்தில் உள்ள ஜகத்குரு ஸ்ரீ வீரசிம்ஹாசன மகாசம்ஸ்தான மடத்துடன் இணைக்கப்பட்ட மைசூரில் உள்ள ஜேஎஸ்எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் பதினாறாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் மாணவர்களிடையே உரையாற்றுகிறார்.
கர்நாடகாவின் மிக முக்கியதத்துவம் வாய்ந்த மடாலய மையங்களில் ஒன்றான சுத்தூர் மடத்தின் பழைய வளாகத்திற்கும் குடியரசு துணைத்தலைவர் செல்கிறார். மைசூருக்கு அருகிலுள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி தேவி கோயிலிலும், மண்டியாவின் மெல்கோட்டில் உள்ள செலுவநாராயண சுவாமி கோயிலிலும் அவர் பிரார்த்தனை செய்கிறார்.
***
(Release ID: 2187779)
AD/SV/RJ
(Release ID: 2187814)
Visitor Counter : 9