வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டது
Posted On:
07 NOV 2025 4:41PM by PIB Chennai
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ், சரக்குப் போக்குவரத்தை திறம்பட மேற்கொள்வதற்கான சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் பல்முனை மாதிரி போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துவது குறித்து திட்டமிடல் குழு இன்று ஆய்வு செய்தது. இன்று நடைபெற்ற இக்குழுவின் 101-வது கூட்டத்தில், சாலைகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ரயில் சேவைகள் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் பணிகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
பிரதமரின் விரைவு சக்தி கொள்கையின்படி ஒருங்கிணைந்த பல்வகை மாதிரி உள்கட்டமைப்பு பணிகள் குறித்தும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இத்தகைய திட்டங்கள் சரக்கு போக்குவரத்தை திறம்பட மேற்கொள்வதற்கு உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதுடன் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187403
***
AD/SV/KPG/RJ
(Release ID: 2187603)
Visitor Counter : 5