வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தில்லி தவிர இதர முக்கிய நகரங்களில் அதிவிரைவு சாலைப் போக்குவரத்து அமைப்பு மேம்படுத்தப்படும்– மத்திய அமைச்சர் திரு மனோகர்லால்
प्रविष्टि तिथि:
07 NOV 2025 3:19PM by PIB Chennai
மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையில் இந்தியா உலக அளவில் 3-வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர்லால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற இந்திய நகர்ப்புற போக்குவரத்து என்ற கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசினார். மெட்ரோ ரயில் பாதைகள் 1,100 கிமீ தொலைவிற்கு தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அவர் கூறினார். மெட்ரோ ரயில் போக்குவரத்துச் சேவையில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக விரைவில் உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். பிரதமரின் மின்னணு பேருந்து சேவை குறித்த அறிவிப்பை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்களில் 10,000 மின்னணு பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும் குருகிராமிற்கு மட்டும் 100 மின்னணு பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தில்லியைத் தவிர நாட்டில் உள்ள இதர முக்கிய நகரங்களில் அதிவிரைவு சாலைப்போக்குவரத்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
நகர்ப்புறத் திட்டம் மற்றும் போக்குவரத்து அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி, நீடித்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூக சமன்பாடு மற்றும் பொது ஆரோக்கியம் ஆகியவற்றையும் மேம்படுத்த உதவிடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187324
***
AD/SV/KPG/RJ
(रिलीज़ आईडी: 2187588)
आगंतुक पटल : 32