ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே அமைச்சகம் கொண்டாடிய வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2025 4:22PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவிற்கு புதுதில்லியில் உள்ள ரயில்பவனில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவையொட்டி அமைச்சர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினர். இதைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையை அனைவரும் கேட்டனர்.
இதே போன்ற விழாக்கள் ரயில்வே துறையின் அனைத்து மண்டலங்கள் மற்றும் கோட்டங்களிலும் நடத்தப்பட்டன. இத்தகைய விழாக்கள் மூலம் ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை கொண்டாடுவதிலும், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் அனைவருக்கும் சேவை செய்வதிலும் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2187392
***
SS/SMB/AG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2187577)
வருகையாளர் எண்ணிக்கை : 40