வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - நியூசிலாந்து இடையேயான வர்த்தக மன்றம் இருநாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 07 NOV 2025 2:42PM by PIB Chennai

மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாக அதிக எண்ணிக்கையிலான இந்திய வர்த்தக பிரதிநிதிகளுடன் நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். வெலிங்டனில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து ஆக்லாந்து வர்த்தக சபை ஏற்பாடு செய்துள்ள இந்திய – நியூசிலாந்து வர்த்தக மன்ற கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இந்த வர்த்தக மன்ற கூட்டம் இரு நாடுகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள், முன்னணியில் உள்ள தொழில்த்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் முக்கிய வர்த்தக பங்குதாரர்கள் என அனைவரையும் ஒருங்கிணைப்பதுடன், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பொருளாதார உறவுக்கும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கும் வகை செய்கிறது.

இந்த வர்த்தக மன்ற கூட்டத்தில் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இருநாட்டின் நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை, உத்திசார் ஒத்துழைப்பு போன்ற பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க அடையாளமாக உள்ளது என்று கூறினார். சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றும், புதுமை கண்டுபிடிப்புகள், மதிப்பு கூட்டு நடவடிக்கைகள் என பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்தின் வர்த்தகத்துறை அமைச்சர் திரு டாட் மெக்லேவுடன் திரு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அவர் ஆக்லாந்து மற்றும் ரொட்டோருவா ஆகிய பகுதிகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

இந்திய வம்சாவழியினரிடையே உரையாற்றிய திரு பியூஷ் கோயல், புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்தியா – நியூசிலாந்து இடையே வாழ்க்கையின் பாலமாக திகழ்கின்றனர் என்று புகழாரம் சூட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு உள்ளதாக அவர் கூறினார். இவ்விரு நாடுகளின் வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187299

***

SS/SV/RK/RJ


(Release ID: 2187500) Visitor Counter : 8