கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டமான இந்திய கடல்சார் வாரம் 2025, மும்பையில் அக்டோபர் 27-ம் தேதி தொடங்குகிறது.
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2025 5:09PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், அக்டோபர் 27 முதல் 31 வரை மும்பையில் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தை நடத்த உள்ளது. இந்த நிகழ்வு உலகளவில் மிகப்பெரிய கடல்சார் கூட்டமாக இருக்கும். இது கடல்சார் சூழலியல் முழுவதிலுமிருந்து முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது. "பெருங்கடல்களை ஒன்றிணைத்தல், ஒரு கடல்சார் பார்வை" என்ற கருப்பொருளின் கீழ், இந்திய கடல்சார் வாரம் 2025 உலகளாவிய கடல்சார் மையமாகவும், கடல்சார் பொருளாதாரத்தில் ஒரு தலைமையாகவும் உருவெடுப்பதற்கான இந்தியாவின் உத்திசார் தொலைநோக்கை வெளிப்படுத்தும்.
இந்த அமர்வை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைப்பார். மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் மற்றும் ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
ஐந்து நாட்கள் நடைபெறும் நிகழ்வில் 11 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் தொழில்துறை பிரதிநிதிகளுடன் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்பார்கள். இது இந்தியாவின் கடல்சார் துறையில் வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
"இந்திய கடல்சார் வாரம், இந்தியாவை ஒரு உலகளாவிய கடல்சார் மையமாக நிலைநிறுத்தும், பசுமை மற்றும் நிலையான கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும், சர்வதேச கடல்சார் வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்" என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
அக்டோபர் 29-ம் தேதி மாலை நடைபெறும் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்த கொண்டு உரையாற்றுவார். உலகெங்கிலும் உள்ள முன்னணி கடல்சார் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு உயர்மட்ட உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்திற்கும் பிரதமர் தலைமை தாங்குவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182651
***
(Release ID: 2182651)
SS/BR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2187276)
வருகையாளர் எண்ணிக்கை : 24