தேர்தல் ஆணையம்
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-ன் முதல் கட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 64.66% வாக்குகள் பதிவு
Posted On:
06 NOV 2025 8:55PM by PIB Chennai
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டம் இன்று ஒரு விழாக்கோல மனநிலையில் அமைதியாக நிறைவடைந்தது. பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன (இரவு 8:15 வரை).
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர், பீகாரில் முதல் முறையாக 100% வாக்குச்சாவடிகளிலும் நேரடி ஒலிபரப்பு மூலம் வாக்குப்பதிவை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து தலைமை அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேரில் தொடர்பு கொண்டார்.
மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 3.75 கோடியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187149
(Release ID: 2187149)
***
AD/BR/SH
(Release ID: 2187168)
Visitor Counter : 13