PIB Headquarters
வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளைக் கடந்து மக்களின் மனதில் உணர்வுபூர்வ பாடலாக உருவெடுத்துள்ளது
प्रविष्टि तिथि:
06 NOV 2025 4:25PM by PIB Chennai
இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம், இந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதியுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் குறிக்கும் வகையில், பாரத அன்னையே நான் உனக்குத் தலை வணங்குகிறேன் என்று பொருள்படும் வகையில் இந்தப் பாடல் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் எண்ணற்ற தலைமுறைகளாக வந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதுடன், நாட்டுப்பற்றையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நாட்டைக் கட்டமைப்பதிலும், ஒருங்கிணைந்த உணர்வுக்கான இந்தியாவின் தேசிய அடையாளச் சின்னமாகவும் திகழ்கிறது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றியுள்ள இந்த வந்தே மாதரம் பாடல் முதல் முதலாக 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பங்காதர்ஷன் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. பின்னர், பங்கிம் சந்திர சட்டர்ஜி உருவாக்கிய காலத்தால் அழியாத 1882-ம் ஆண்டு வெளியான ஆனந்த மடம் என்ற நாவலிலும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் நாட்டின் நாகரீகம், அரசியல் மற்றும் கலாச்சார ஒருமைப்பாட்டிற்கு ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக உருவெடுத்துள்ளது. ஒருமைப்பாடு, தியாகம், பக்தி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், அனைத்து இந்தியர்களாலும் போற்றப்பட்டு பாடப்படும் பாடலாக இது அமைந்துள்ளது.
19-ம் நூற்றாண்டு இறுதியில் ஞானம் மற்றும் இலக்கியத்திலிருந்து பிறந்த இந்தப் பாடல் காலணிய ஆதிக்கத்திற்கு எதிரான வலுவான அடையாளமாக உருவெடுத்ததுடன் அனைவரது விருப்பத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்திருந்தது. நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார அம்சங்களை வடிவமைப்பதில் நவீன இந்தியாவிற்கான சுயவிழிப்புணர்வுடன் கூடிய பாடலாக இது அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186984
****
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2187142)
आगंतुक पटल : 190