ஜல்சக்தி அமைச்சகம்
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, சிறப்பு இயக்கம் 5.0-ன் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது
Posted On:
06 NOV 2025 1:07PM by PIB Chennai
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, தூய்மை மற்றும் நிலுவைகளைக் குறைக்கும் நோக்கத்துடன், 2025-ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற சிறப்புப் பிரச்சாரம் 5.0-ன் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இத்துறைச் செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ், அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கை, அனைத்து மட்டங்களிலும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான துறையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
இத்துறையின் நடவடிக்கைகள் மூலம், 100 காகிதக் கோப்புகள் தீர்வு காணப்பட்டு, ஆவண நிர்வாகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பழைய பொருட்களை அப்புறப்படுத்தியதன் மூலம், ரூ.3,73,706 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக, இந்தச் சிறப்பு இயக்கத்தின் கீழ் இத்துறை தனது இலக்குகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186870
***
SS/SE/SH
(Release ID: 2187099)
Visitor Counter : 4