மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பலதுறை பயன்பாட்டுத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ), வாழ்க்கையை மாற்றியமைக்கும், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 நோக்கி இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்
Posted On:
05 NOV 2025 1:43PM by PIB Chennai
வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2025-ல் செயற்கை நுண்ணறிவு குறித்த உயர்நிலைக்குழு விவாதத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தியது.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், புத்தாக்கம், உள்ளடக்கம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த இந்தியா எவ்வாறு பொறுப்புடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்பதை ஆராய அரசு, கல்வித்துறை மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களின் கருத்துக்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுச் சூழல் அமைப்பை மையமாகக் கொண்டு - டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் உள்நாட்டு பெரிய மொழி அறிந்த ஏஐ மாதிரிகளை மேம்படுத்துதல் முதல், நெறிமுறை ஏஐ நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது வரை - வரவிருக்கும் இந்தியா - ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026-க்கு இது களம் அமைத்தது.
அமர்வைத் தொடங்கி வைத்துப் பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்ச செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன், "அனைத்து தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது, நாட்டு மக்களுக்கு என்ன வழங்குகிறது என்பதுதான். இந்தியாவைப் பொறுத்தவரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான பாதையில் நாடு உறுதியாக இருப்பதை உறுதிசெய்ய, செயற்கை நுண்ணறிவு போன்ற பலதுறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உண்மையிலேயே ஒரு வாய்ப்பாகும்" என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186623
******
AD/SMB/SH
(Release ID: 2186672)
Visitor Counter : 8