மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சிறப்பு இயக்கம் 5.0- ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது, முக்கிய வகைமைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை 100% அடைந்தது
Posted On:
05 NOV 2025 10:10AM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 5.0-ஐ வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. பொதுமக்களின் குறைகள் மற்றும் முறையீடுகளைத் தீர்ப்பது, தூய்மை இயக்கங்களை நடத்துவது, பயனுள்ள பதிவு நிர்வாகத்தை உறுதி செய்வது மற்றும் முக்கிய வகைமைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவது ஆகியவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்தியது.
இயக்க காலத்தில், துறை மற்றும் அதன் துணை அலுவலகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இவற்றை மத்திய இணையமைச்சர் திரு எஸ்.பி. சிங் பாகேல், மதிப்பாய்வு செய்யப்பட்டு, துறையின் செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுபடுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஊழியர்களிடையே தூய்மை மற்றும் நிலைத்தன்மையை உருவாக்க கழிவிலிருந்து கலை மற்றும் கழிவிலிருந்து செல்வம் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சம்பல்பூரின் சிப்லிமாவில் உள்ள மத்திய கால்நடை இனப்பெருக்கப் பண்ணை இரும்புக் கழிவுகளைப் பயன்படுத்தி பசுவின் சிலையை உருவாக்கியது. இந்தக் கலைப்படைப்பு கால்நடைகள் மற்றும் கால்நடைகளுக்கான மரியாதையை அடையாளப்படுத்துகிறது. கழிவுப்பொருட்களின் ஆக்கப்பூர்வமான மறுபயன்பாடு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆதாரவள செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்தக் கலை வெளிப்பாடு "கழிவிலிருந்து கலை" என்ற கருத்தை உள்ளடக்கியது, அழகியல் மதிப்புடன் புதுமையை வெளிப்படுத்துவதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186559
******
AD/SMB/SH
(Release ID: 2186666)
Visitor Counter : 6