பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2025 10:26AM by PIB Chennai
ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கையும் செய்தியும் காலத்தால் அழியாத ஞானத்துடன் மனிதகுலத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருவதாக திரு மோடி கூறியுள்ளார். "அவரது கருணை, சமத்துவம், பணிவு மற்றும் சேவை பற்றிய போதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன" என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கையும் செய்தியும் காலத்தால் அழியாத ஞானத்துடன் மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன. கருணை, சமத்துவம், பணிவு மற்றும் சேவை பற்றிய அவரது போதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. அவரது பிறந்த தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள். அவரது தெய்வீக ஒளி நமது கோளினை என்றென்றும் ஒளிரச் செய்யட்டும்."
(Release ID: 2186563)
*****
AD/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2186628)
வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam