பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்
Posted On:
04 NOV 2025 6:10PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற 3 நாள் "வளர்ந்து வரும் அறிவியல். தொழில்-நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு மாநாடு" (ESTIC 2025) நிகழ்வின்போது, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பார்வை என்ற தலைப்பில் வட்டமேசை மாநாட்டில் உரையாற்றினார்.
வெளிநாடுவாழ் இந்திய விஞ்ஞானிகளை "இந்திய அறிவியல் குடும்பத்தின் அங்கம்" என்று வரவேற்றதுடன், இந்தியாவின் ஈடுபாட்டை "மூளைச் சலவை"யிலிருந்து "தலைகீழ் மூளைச் சலவை" அல்லது "மூளைப் பரிமாற்றம்" என்ற மாதிரிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தை முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் நெறிப்படுத்தினார். இந்தியாவின் அறிவியல் சூழலை வலுப்படுத்த பல ஆலோசனைகளை வழங்கினர். இந்திய மாணவர்களை ஓராண்டு வெளிநாட்டில் பணிபுரிய அனுமதிக்கும் மாணவர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், பன்னாட்டுப் பேச்சாளர்களுக்குச் சிக்கலாக உள்ள பயணம் மற்றும் மாநாட்டு அனுமதி நடைமுறைகளை எளிதாக்க, முன் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். மேலும், வைபவ் பெல்லோஷிப்பை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் சவால்களுக்கு ஏற்ற உள்நாட்டு தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவது மற்றும் பொது-தனியார் கூட்டுறவுகள் மூலம் ஆராய்ச்சியைத் தொழில் துறையுடன் இணைத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனைகளுக்குப் பதிலளித்த அமைச்சர், எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் உள்பட பல ஆக்கபூர்வமான யோசனைகளை அரசு ஏற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து சில முன்மொழிவுகள் ஆராயப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2186363
***
AD/VK/RJ
(Release ID: 2186493)
Visitor Counter : 6