சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு இயக்கம் 5.O நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது
प्रविष्टि तिथि:
03 NOV 2025 3:44PM by PIB Chennai
மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு இயக்கம் 5.O நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது. 2025 அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை நடைபெற்ற பணிகளின்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தலைமை அலுவலகங்கள், மத்திய அரசு மருத்துவமனைகள், சார்பு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் சிறப்பு இயக்கத்தின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அலுவலகங்களில் 1984 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 31,661 கோப்புகள் களையப்பட்டது. தூய்மைப் பணிகள் மூலம் 40,257 சதுரஅடி அளவிலான அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது. 5,169 பொதுமக்களின் குறைகளுக்கும், 85 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கும் தீர்வுகாணப்பட்டது. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.41.37 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. 9,035 மின் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 2,850 மின் கோப்புகள் நீக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185852
***
AD/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2185996)
आगंतुक पटल : 16