குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தெலங்கானாவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2025 12:20PM by PIB Chennai
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பயங்கர விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார். இந்த கடினமான தருணத்தில், தமது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள திரு சி.பி ராதாகிருஷ்ணன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2185731)
AD/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2185821)
வருகையாளர் எண்ணிக்கை : 18