பாதுகாப்பு அமைச்சகம்
லெப்டினன்ட் ஜெனரல் அவினாஷ் தாஸ் டெல்லி கண்டோன்மென்ட் ராணுவ மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்
प्रविष्टि तिथि:
02 NOV 2025 2:35PM by PIB Chennai
ஆயுதப்படைகளுக்கான மருத்துவ சேவையில் கிட்டத்தட்ட 40 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்ட தலைசிறந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரான லெப்டினன்ட் ஜெனரல் அவினாஷ் தாஸ் , 2025 நவம்பர் 01 அன்று புதுதில்லியில் உள்ள தில்லி கண்டோன்மென்ட் ராணுவ மருத்துவமனையின் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், மருத்துவ நிபுணத்துவம், தலைமைப் பண்பு மற்றும் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் கிடைத்த அனுபவம் ஆகியவற்றின் செறிவான கலவையுடன் இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, இவர் தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள அடிப்படை மருத்துவமனை மற்றும் லக்னோவில் உள்ள ராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் மூத்த ஆலோசகர் போன்ற முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். தனது புகழ்பெற்ற தொழில் வாழ்க்கை முழுவதும், லெப்டினன்ட் ஜெனரல் அவினாஷ் தாஸ் முன்மாதிரியான தலைமை மற்றும் அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளார். இதற்காக, பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
வடக்கு பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனை தளபதியாக இருந்தபோது, உதம்பூரில் இருந்த ராணுவ மருத்துவமனையையும் ஒரு புதிய, அதிநவீன மருத்துவமனை கட்டிடத்திற்கு மாற்றுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
ராணுவ மருத்துவமனையின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், ஆயுதப் படைகளுக்கும் மற்றவர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதில் மருத்துவமனையின் தரத்தை மேலும் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பரந்த அனுபவத்தின் மூலம், நோயாளிகள் கவனிப்பு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் புதுமை மற்றும் சிறப்பை வளர்த்து, மருத்துவமனையின் பாரம்பரியத்தை மேம்படுத்துவதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185450
***
AD/VK/RJ
(रिलीज़ आईडी: 2185550)
आगंतुक पटल : 24