நிதி அமைச்சகம்
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான மத்திய அரசின் கணக்குகள் குறித்த மாதாந்தர ஆய்வறிக்கை வெளியீடு
Posted On:
31 OCT 2025 4:32PM by PIB Chennai
நடப்பு நிதியாண்டில் (2025-26) செப்டம்பர் மாதம் வரையிலான முதலாவது அரையாண்டில் மத்திய அரசின் கணக்குகள் குறித்த மாதாந்தர ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரை மத்திய அரசின் வருவாய் 17,30,216 கோடியாக உள்ளது. (இது 2025-26-ம் ஆண்டு மொத்த வருவாய்க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 49.5 சதவீதமாகும்). இதில் வரி வருவாயாக (மத்திய அரசின் நிகர வருவாய்) 12,29,370 கோடி ரூபாயும், வரி வருவாய் அல்லாத இதர வருவாயாக 4,66,076 கோடி ரூபாயும், கடன் அல்லாத மூலதன வருவாயாக 34,770 கோடி ரூபாயும் அடங்கும்.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு விடுவிக்கும் வரிப் பகிர்வு 6,31,751 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 86,948 கோடி ரூபாய் கூடுதலாகும்.
மத்திய அரசின் மொத்த செலவினத் தொகை 23,03,339 கோடி ரூபாயாக உள்ளது (இது 2025-26 ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் 45.5 சதவீதமாகும்). இதில் 17,22,593 கோடி ரூபாய் வருவாயின செலவினமாகவும், 5,80,746 கோடி ரூபாய் மூலதனச் செலவினமாகவும் உள்ளது. மொத்த வருவாயின செலவுகளில் 5,78,182 கோடி ரூபாய் வட்டியாகவும், 2,02,367 கோடி ரூபாய் முக்கிய மானியத் தொகையாகவும் உள்ளன.
****
(Release ID: 2184648 )
AD/SV/KPG/SH
(Release ID: 2184952)
Visitor Counter : 4