PIB Headquarters
azadi ka amrit mahotsav

இளைஞர்களுக்கான அதிகாரம் வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களே முக்கிய உந்து சக்தி

Posted On: 31 OCT 2025 10:36AM by PIB Chennai

நாடு தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. மக்கள் தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்டவர்கள், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் நாடு முன்னேறி வருகிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில், மத்திய அரசின் மைல்கல் முயற்சியாக எனது இளைய பாரதம் (மேரா யுவா பாரத்) என்ற இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2023 அக்டோபர் 31ஆம் தேதி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான தேசிய ஒற்றுமை தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொழில் நுட்பம், நிர்வாகம் மற்றும் பொது பங்கேற்பின் ஆற்றல்மிக்க கலவையாக விளங்குகிறது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி  அமைப்பாக செயல்படும் மேரா யுவ பாரத், தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது.

இந்த தளத்தின் மூலம், இளைஞர்கள் தன்னார்வப் பணி, அனுபவக் கற்றல், தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை அடையலாம். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக கூட்டாளர்கள் வழங்கும் திட்டங்களில் ஈடுபடலாம். சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், புதுமை, தொழில்முனைவு மற்றும் சமூக உள்ளடக்கம் போன்ற நிஜ சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களில் பங்கேற்கலாம்.

தேசிய இளைஞர் கொள்கையுடன் இணைந்த இத்திட்டம், முதன்மையாக 15 முதல் 29 வயதுடைய பிரிவினரை ஈடுபடுத்துகிறது. மேலும், 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினரையும் ஊக்குவித்து, ஆரம்பகால பங்கேற்பையும் பொதுசமுகம் குறித்த விழிப்புணர்வையும் வளர்க்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184456

 

***

SS/VK/SH


(Release ID: 2184898) Visitor Counter : 5