தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 குறித்த ஆலோசனைகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Posted On: 31 OCT 2025 12:35PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ள வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 மற்றும் அதன் தனிப்பட்ட கணக்கு விபர ஒழுங்குமுறை அறிக்கை (திருத்தம்) தொடர்பான வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு இம்மாதம் 31-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த திருத்தங்கள் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக கால அவகாசத்தை நவம்பர் 7-ம் தேதி வரை நீட்டிப்பது என ட்ராய் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மின்னணு வாயிலாக fa@trai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.மேலும் இந்த வரைவு அறிக்கை தொடர்பான தகவல்களை அறிய இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையத்தின் (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வு) ஆலோசகர் திரு விஜயகுமாரின் +91-11- 20907773 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

(Release ID 2184498)  

***

SS/SV/KPG/SH


(Release ID: 2184850) Visitor Counter : 5