சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        2024-25 நிதியாண்டில் சுங்கவரி வசூல் செலவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.2,062 கோடி சேமிப்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 4:45PM by PIB Chennai
                
                
                
                
                
                
                தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளில் சுங்கவரி வசூல் செலவை ரூ.2,062 கோடியாக வெகுவாகக் குறைத்துள்ளது. 
சுங்கவரி வசூல் செலவு 2023-24 நிதியாண்டில் ரூ.4,736 கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ.2,674 கோடியாகக் குறைந்துள்ளது. சதவீத அடிப்படையில், சுங்கவரி வசூல் செலவு 2023-24 நிதியாண்டில் 17.27 சதவீதத்திலிருந்து 2024-25 நிதியாண்டில் 9.27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2023-24 நிதியாண்டில் சுங்க நிறுவனங்கள் வசூலித்த மொத்த சுங்கவரி ரூ.27,417 கோடி, இதில் சுமார் ரூ.22,681 கோடி என்எச்ஏஐக்கு அனுப்பப்பட்டது. 2024-25 நிதியாண்டில் சுங்க நிறுவனங்கள் மொத்தம் சுமார் ரூ.28,823 கோடியை வசூலித்தன. இதில் சுமார் ரூ.26,149 கோடி ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
தற்போதைய ஒப்பந்தங்களை நெருக்கமாகக் கண்காணித்தல், 3 மாத நீட்டிப்பு விதியை நீக்குதல், சரியான நேரத்தில் ஏலம் நடத்துதல், ஒரு வருட கால ஒப்பந்தங்களை அதிகரித்தல், மூன்று மாத குறுகிய கால ஒப்பந்தங்களைக் குறைத்தல் போன்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எடுத்த பல்வேறு முயற்சிகளால் சுங்கவரி வசூல் செலவில் சேமிக்கப்பட்டுள்ளது. 
கூடுதலாக, ஒரு நிதியாண்டில் ஒரு நிதியாண்டில் மூன்று முறை மட்டுமே முன்கூட்டியே ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள  விண்ணப்பிக்கலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ஒப்பந்ததாரர்கள் மாறுவதைத் தடுப்பதும், பணிகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதும், குறுகிய காலத்தில் ஏற்படும் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதுமே இதன் நோக்கம். 
சுங்கவரி வசூல் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய 'அகில இந்திய பயனர் கட்டண வசூல் கூட்டமைப்புடன் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. செயல்திறன் பாதுகாப்பு மற்றும் வங்கி உத்தரவாதங்களை சரியான நேரத்தில் வெளியிடுவது அவர்களின் ஏல திறனை மேம்படுத்தியது.
நாடு முழுவதும் சுங்கவரி செயல்பாடுகளில் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் 
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184193
வெளியீட்டு அடையாள எண் : 2184193
***
AD/VK/SH
                
                
                
                
                
                (Release ID: 2184421)
                Visitor Counter : 5