ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் குறித்த தேசிய மாநாடு புவனேஸ்வரில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
30 OCT 2025 4:43PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பில் ஒடிசாவின் பூவனேஸ்வரில் 2025 அக்டோபர் 31 முதல் நவம்பர் 1 வரை கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் கைத்தறி மற்றும் கைவினைத்துறை பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தியாவில் கைத்தறித் துறையின் வாய்ப்புகள் மற்றும் சவால்களை புரிந்துகொள்வது, இரண்டாவதாக மத்திய அரசின் கீழ் இத்துறைக்கான வரவிருக்கும் புதிய திட்டம் குறித்து ஆலோசனை செய்வது ஆகியவை மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
ஒடிசா அரசின் தலைமைச் செயலாளர் திரு மனோஜ் அகுஜா தொடக்க அமர்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார். மத்திய ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி நீலம் ஷாமி ராவ் "கைத்தறி மற்றும் கைவினைத்துறைகளுக்கான புதிய திட்டங்கள் - ஒரு முன்னுதாரண மாற்றம்" என்ற தலைப்பில் நடைபெறவுள்ள அமர்வை தொடங்கி வைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184190
வெளியீட்டு அடையாள எண் : 2184190
***
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2184417)
आगंतुक पटल : 23