தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொடர் லாபம் மற்றும் வளர்ச்சிக்கான பாதையை வகுத்துள்ள திரு ஜோதிராதித்ய சிந்தியா

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2025 4:29PM by PIB Chennai

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா இன்று புது தில்லியில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் 2வது உத்திசார் மறுஆய்வு மற்றும் திட்டமிடல் கூட்டத்திற்கு (2025-26) தலைமை வகித்தார். நாடு முழுவதும் உள்ள 28 வட்டங்களின் தலைமை பொது மேலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

2024-25 நிதியாண்டில் பிஎஸ்என்எல் வரலாற்று ரீதியாக தொடர்ச்சியான காலாண்டு நிகர லாபத்தை அடைந்ததைத் தொடர்ந்து, லாப வேகத்தை நிலைநிறுத்துவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 2வது காலண்டின் இலக்குகளுக்கு எதிராக 93% வருவாய் விகிதத்தை அடைந்து, சுமார் ரூ.5,347 கோடியை ஈட்டி, மொத்தமாக முதல் அரையாண்டில் வருவாயாக ரூ.11,134 கோடியை எட்டியதற்காக தலைமைக் குழுவை சிந்தியா பாராட்டினார். 2025-26 நிதியாண்டிற்கான பிஎஸ்என்எல்-லின் ஆண்டு வருவாய் இலக்கு முந்தைய ஆண்டின் ரூ.25,000 கோடியிலிருந்து ரூ.27,500 கோடியாக உயர்ந்துள்ளது.

அமைச்சர் கூறுகையில், தரமான சேவையை வழங்குதில்   ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்திய சிந்தியா, அனைத்து தலைமை பொதுமேலாளர்களும் சராசரி பழுது நேரம், செயல்பாட்டு நேரம், வாடிக்கையாளர் திருப்தி குறியீடுகள் போன்றவற்றை தினசரி அடிப்படையில் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184182

வெளியீட்டு அடையாள எண் : 2184182

***

AD/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2184414) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Odia , Telugu