சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கையெழுத்து
प्रविष्टि तिथि:
30 OCT 2025 4:25PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை , இந்தியாவின் முன்னணி மனிதவள மற்றும் பணியாளர் தீர்வு நிறுவனங்களில் ஒன்றான பெர்சோல்கெல்லி இந்தியா நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ள்ளது, இது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த சீர்திருத்த முயற்சியின் கீழ், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்களை பல்வேறு துறைகளில் பொருத்தமான வேலைவாய்ப்புகளுடன் இணைக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தொழில்முறை மனிதவள ஆலோசகர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. சரிபார்க்கப்பட்ட வேட்பாளர் தரவு மனிதவள கூட்டாளருடன் பகிரப்படும், அதே நேரத்தில் பயனாளிகள் இலவச ஆலோசனை, விண்ணப்ப ஆதரவு, நேர்காணல் தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உதவியைப் பெறுவார்கள். இந்த ஒத்துழைப்பு வழக்கமான கண்காணிப்பு மூலம் கடுமையான தரவு தனியுரிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்கிறது. இது அவர்களுக்கு மேம்பட்ட வேலைவாய்ப்புத் திறன் மூலம் பயனளிக்கும்,
இந்த நிகழ்வில் பேசிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர், "இந்த கூட்டாண்மை சமூக நீதியை பொருளாதார அதிகாரமளிப்பாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். விளிம்புநிலை சமூகங்களிலிருந்து சரிபார்க்கப்பட்டவர்களை திறமையான மனிதவள கூட்டாளர்களுடன் இணைப்பதன் மூலம், தகுதியுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு சூழலை நாங்கள் உருவாக்குகிறோம்." என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184179
***
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2184407)
आगंतुक पटल : 25