ரெயில்வே அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        நாடு முழுவதிலும் பல்வேறு ரயில் நிலையங்களில் பயணியர் காத்திருப்பு பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது- மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 4:59PM by PIB Chennai
                
                
                
                
                
                
                நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 76 பயணியர் காத்திருப்பு பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணியர் காத்திருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதிலும் நவீன வடிவமைப்புடன் அந்தந்த பகுதிகளில் உள்ள சூழலுக்கு ஏற்ப புதிய காத்திருப்பு பகுதிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 
இந்த மேம்பாட்டு பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தீபாவளி மற்றும் சத் பண்டிகையின் போது புதுதில்லி ரயில் நிலையத்தில் பயணியரின் கடும் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு பகுதிகள் பெரும் உதவிகரமாக இருந்தது என்றும் இந்த காத்திருப்பு பகுதிகள் 4 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பயணியரின் நலன்களை கருத்தில் கொண்டு புதுதில்லி ரயில் நிலையத்தில் நிரந்தர காத்திருப்பு பகுதி வடிவமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் 7000 பயணிகளை கையாள முடியும் என்றும் அவர் கூறினார்.  இந்த காத்திருப்பு பகுதிகள் 3 பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதில் 150 கழிப்பறைகள், பயணச்சீட்டு கவுண்டர்கள், இலவச குடிநீர் வசதிகள், பயணச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் போன்ற வசதிகள் இடம்பெறும். 
பயணியர் காத்திருப்பு பகுதிகளை அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட 76 ரயில் நிலையங்களில்  சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்புத்தூர் ரயில் நிலையம் மற்றும் எர்ணாகுளம் ரயில் நிலையம் ஆகியவை அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184207
 
***
SS/SV/AG/SH
                
                
                
                
                
                (Release ID: 2184333)
                Visitor Counter : 8