எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-ம் நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் இந்திய எஃகு நிறுவனத்தின் (செயில்) வலுவான நிதிசார் செயல்பாடுகள்

Posted On: 30 OCT 2025 11:49AM by PIB Chennai

பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையம் (செயில்) நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையும் முதலாவது அரையாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று (30 அக்டோபர் 2025) வெளியிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளையும், வலுவான நிதி மேலாண்மையையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

கச்சா எஃகு உற்பத்தி தொடர்ந்து 9.5 மில்லியன் டன்னாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் சில்லரை விற்பனை மற்றும் பிற நுகர்வோருக்கான விற்பனை அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் மொத்த விற்பனை 16.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

விலைவாசி ஏற்றத்தாழ்வு போன்ற சவால்கள் இருந்தபோதிலும் உயர் அளவிலான விற்பனை காரணமாக இந்த நிறுவனத்தின் செயற்பாட்டு வருவாய் ரூ.52,600 கோடியாக உள்ளது.

வருவாய்க்கு பிந்தைய ஈவுத் தொகை 32 சதவீதமாக இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் செலவுகளை திறன்பட கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் கடன்கள் 26,427 கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.

செயில் நிறுவனத்தின் அரையாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசிய அதன் தலைவரும், மேலாண்மை இயக்குநர், இதன் நிதி மற்றும் செயல்பாட்டு திறன்கள் சிறப்பாக உள்ளது என்று கூறினார். நிலையான உற்பத்தியை உறுதிசெய்யும் வகையில் அதன் உயர் உற்பத்தி திறன் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு அதன் பணியாளர்களின் ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக அமைந்துள்ளது என்றும் சர்வதேச அளவில் எஃகு சந்தையின் செயல்பாடுகள் நிலையற்றதாக இருந்தபோதிலும், செயில் நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து குறிப்பிடத்தக்க சாதனை படைத்து வருவதாக அவர் கூறினார்.

உற்பத்தி திறனை மேம்படுத்துவது மற்றும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நிறுவனத்தின் நிதிநிலையை வலுப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எஃகு உற்பத்தியிலும் தனது பங்களிப்பை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184054  

***

SS/SV/AG/KR


(Release ID: 2184156) Visitor Counter : 6