ஆயுஷ்
பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் ஆயுஷ் மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் உள்ளன: மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
Posted On:
29 OCT 2025 1:56PM by PIB Chennai
பக்கவாதப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுக்கான முழுமையான சிகிச்சை வழங்குவதிலும் ஆயுஷ் மருத்துவமனை சிறப்பான பங்களிப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் இறப்பு மற்றும் உடல் செயலிழப்பிற்கு முக்கியக் காரணியாக பக்கவாதப் பாதிப்பு உள்ளது. பக்கவாதப் பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆயுஷ் மருத்துவம் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதாக உள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் பக்கவாதப் பாதிப்புகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் சிறப்பான மருத்துவ சிகிச்சை முறைகளின் அவசியம் குறித்து மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் வலியுறுத்தியுள்ளார். நீண்ட கால அடிப்படையிலான மறுவாழ்வு சிகிச்சைகள் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நிலைகளில் ஆயுஷ் மருத்துவம் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார். தரமான வாழ்வியல் முறைகளை மேம்படுத்துவதற்கான பாரம்பரிய சுகாதார அடிப்படையிலான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் தேசிய அளவில் பக்கவாதத்தால் ஏற்படும் அரசின் சுமைகளைக் குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்துவதுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பக்கவாதப் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183696
***
SS/SV/KPG/SH
(Release ID: 2183932)
Visitor Counter : 6