மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கூட்டுறவுடன் கூடிய நீலப் பொருளாதாரம் உத்வேகம் பெறுகிறது; மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் கிளஸ்டரில் மத்திய மீன்வளச் செயலாளர் ஆய்வு
Posted On:
28 OCT 2025 4:29PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறையின் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மீன்வள கூட்டுறவு கிளஸ்டரை பார்வையிட்டு அதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த மீன்வள மதிப்புச் சங்கிலி மேம்பாட்டிற்கான ஒரு மாதிரியாக இந்தக் கிளஸ்டர் உருவாக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அடிப்படையிலான அணுகுமுறை மூலம் மீன்வளம் சார்ந்த வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதும், கள மட்டத்திலான சவால்களை மதிப்பிடுவதையும் செயலாளரின் இந்த வருகை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வின் போது, மகாராஷ்டிராவின் ராய்காட்டைச் சேர்ந்த 156 முதன்மை மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 9 மீன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 251 உறுப்பினர்களை டாக்டர் லிக்கி சந்தித்தார்.
கூட்டுறவு அடிப்படையில் வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183355
***
SS/PKV/SH
(Release ID: 2183475)
Visitor Counter : 6