நிலக்கரி அமைச்சகம்
மத்திய நிலக்கரி அமைச்சகம் “கோய்லா சக்தி” - ஸ்மார்ட் நிலக்கரி பகுப்பாய்வு தகவல் பலகையை அறிமுகப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
28 OCT 2025 2:08PM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகம் “கோய்லா சக்தி” என்னும் ஸ்மார்ட் நிலக்கரி பகுப்பாய்வு தகவல் பலகையை அறிமுகப்படுத்துகிறது. இது நிலக்கரித் துறை செயல்பாடுகளின் நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான ஒருங்கிணைந்த தளமாகச் செயல்படும். இதற்கான வெளியீட்டு நிகழ்வு 2025 அக்டோபர் 29 அன்று புது தில்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் நடைபெறும். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார்.
தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தின் மூலம் டிஜிட்டல் இந்தியாவை வலுப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, நிலக்கரித் துறைக்குள் டிஜிட்டல் அமைப்புகளை ஒருங்கிணைக்க நிலக்கரி அமைச்சகம் தொடர்ச்சியான முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகளில், கோய்லா சக்தியின் துவக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இது நிலக்கரி உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கான ஒருங்கிணைந்த, நிகழ்நேர டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது. இந்தத் தளம் தரவு சார்ந்த முடிவெடுப்பதைச் செயல்படுத்துகிறது. முழு நிலக்கரி சூழல் அமைப்பிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை இது உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183276
***
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2183372)
आगंतुक पटल : 21