ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே அமைச்சகம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் 2025-ஐ கடைபிடிக்கிறது
प्रविष्टि तिथि:
27 OCT 2025 4:41PM by PIB Chennai
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் நாடு தழுவிய அளவிலான நடவடிக்கைகளில் ரயில்வே வாரியத்தின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் 2025-ஐ ரயில்வே அமைச்சகம் கடைபிடிக்கிறது. இது பொது நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு, வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு சதீஷ்குமார் தலைமையில் ரயில்வே வாரியத்தின் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் ஒருங்கிணைப்பு உறுதிமொழியை ஏற்கும் நிகழ்வுடன் இது தொடங்கியது. அமைச்சகத்தின் பல்வேறு இயக்குநரகங்களின் உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரடியாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் இதில் கலந்துகொண்டனர். இது 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 02 வரை கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182948
***
SS/IR/AG/SH
(रिलीज़ आईडी: 2183045)
आगंतुक पटल : 19