PIB Headquarters
இந்தியாவின் மொழியியல் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
27 OCT 2025 10:08AM by PIB Chennai
இந்தியா பன்முக மொழி பாரம்பரியத்துடன் பல்வேறு பேச்சுவழக்கு மொழிகளையும் கொண்டுள்ள வளமான நாடாகும். நாட்டின் பாரம்பரிய தன்மை கொண்ட மொழிகளை பாதுகாப்பதற்காகவும் ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கென கொள்கைகள், திட்டங்கள், முன்முயற்சிகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மிகவும் தொன்மைவாய்ந்த வளமான பாரம்பரியத்தைக் கொண்டதும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம், தத்துவம் கலாச்சார வளமை கொண்ட மொழிகளுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்தத் தொன்மையான மொழிகள் இந்தியாவின் கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழிகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கும் வகையிலும் சில குறிப்பிட்ட வரையறைகளின் கீழ் செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. அக்டோபர் 3 2024 அன்று மராத்தி, பாலி, பிரக்கிரீத், அசாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து நாட்டில் செம்மொழி அந்தஸ்து கொண்ட மொழிகளின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கான வரைமுறைகள் வரலாற்று நிபுணர்கள் மற்றும் மொழியியல் வல்லுநர்களின் ஆலோசனைப்படி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182753
***
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2182952)
आगंतुक पटल : 37