மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
Posted On:
24 OCT 2025 4:40PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் 2025 அக்டோபர் 25 அன்று கேரள மாநிலத்தின் திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் நடைபெறும் மீன்வளம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள் மத்தியில், வாழ்வாதார மேம்பாடு, நீடித்த மீன்வள நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் மீனவ ஆதரவுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளின் போது, அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் கிசான் கடன் அட்டைகள் , டிரான்ஸ்பாண்டர்கள், மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு திட்ட பதிவு சான்றிதழ்கள் ஆகியவற்றையும் மீனவர்களுக்கு வழங்கவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182178
***
AD/RB/RJ
(Release ID: 2182534)
Visitor Counter : 3