அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மருத்துவக் கல்வியின் மாறிவரும் முன்னேற்றங்களை டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கினார்
Posted On:
25 OCT 2025 4:04PM by PIB Chennai
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இந்தியாவில் மருத்துவக் கல்வியின் வேகமான மாற்றம், சுகாதாரப் பராமரிப்பின் முன்னுதாரணங்களை எடுத்துரைத்தார், இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பை மேலும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றிய ஒரு தசாப்தத்தை சுட்டிக்காட்டினார்.
தில்லி பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரியின் (யுசிஎம்எஸ்) 54-வது நிறுவன தினம் மற்றும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார், மேலும் புதிய தலைமுறை மருத்துவர்கள் இரக்கத்தில் வேரூன்றி புதுமைகளைத் தழுவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த பத்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் பயிற்சி வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்புடன் இந்தியாவில் மருத்துவக் கல்வி ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 45,000 இளநிலை மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன; இன்று, இந்த எண்ணிக்கை 1.5 லட்சத்தை நெருங்குகிறது,” என்று அவர் கூறினார், எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களின் விரிவாக்கம் பிராந்தியங்கள் முழுவதும் மருத்துவக் கல்விக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தியுள்ளது மற்றும் அதிகமான பெண்கள் மருத்துவத் தொழிலைத் தொடர உதவியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவையின் மாற்றத்தை "மூன்று மடங்கு - அணுகக்கூடியதாகவும், மலிவாகவும் உள்ளதாக அவர் விவரித்தார். ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்தகங்கள் போன்ற முயற்சிகள் சுகாதார வளர்ச்சியை அதிகரித்துள்ளதாகக் கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் சுகாதார காப்பீடு எவ்வாறு ஏற்கனவே இருக்கும் நோய்களை உள்ளடக்கியதாக உருவாகியுள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
இந்தியாவின் உயிரி அறிவியல் துறையின் வளர்ந்துவரும் உலகளாவிய நம்பகத்தன்மையையும் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கினார். மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றுமாறு யுசிஎம்எஸ் போன்ற நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் நிறுவனத்தின் 54 ஆண்டுகால பயணத்தைக் குறிக்கும் ஒரு நினைவுப் பரிசு வெளியிடப்பட்டது, இது மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொது சேவையில் கல்லூரியின் மைல்கற்களைப் பதிவு செய்தது. இந்தியாவின் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில் இந்த நிறுவனத்தின் வளர்ந்து வரும் பங்களிப்பை, இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது.
டாக்டர் ஜிதேந்திர சிங், கல்வியில் சிறந்து விளங்கியதற்காகவும், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் பங்களித்ததற்காகவும் தகுதியான மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். விருது பெற்றவர்களை அமைச்சர் வாழ்த்தினார், மேலும் இந்தியாவின் புதிய தலைமுறை மருத்துவர்கள் நாட்டின் சுகாதார முன்னுரிமைகளை வடிவமைப்பதில் ஒரு தீர்க்கமான பங்களிப்பை வகிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"இன்று பட்டம் பெறுபவர்கள் 2047-ல் இந்தியா 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும்போது அவர்களின் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பார்கள்," என்று அவர் கூறினார். "ஆரோக்கியமான, அதிக தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் சிற்பிகளாக இருக்க உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182446
***
AD/PKV/RJ
(Release ID: 2182480)
Visitor Counter : 7