பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான ‘மாஹே’ இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது

Posted On: 24 OCT 2025 4:49PM by PIB Chennai

கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (சிஎஸ்எல்) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மாஹே என்ற எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களில் முதலாவது கப்பல் இன்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மாஹேவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கப்பல் கட்டுமானத்தில் அதிகரித்து வரும் இந்தியாவின் தற்சார்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த போர்க்கப்பல் சிஎஸ்எல் நிறுவனத்தால் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.  இது நீருக்கடியில் கண்காணிப்பு, குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் நடவடிக்கைகளுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது. தோராயமாக 78 மீட்டர் ஆழத்தில், சுமார் 1,100 டன் இடப்பெயர்வுடன், டார்பிடோக்கள், பல்வேறு செயல்பாடுகளுடன் கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் மேம்பட்ட ரேடார்கள் மற்றும் சோனார்கள் மூலம் நீருக்கடியில் போரில் சிறப்பாகச் செயல்படுகிறது.

நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையின் திறனை கணிசமாக அதிகரிப்பதுடன், கடலோரப் பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும். 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள ‘மாஹே’ போர்க்கப்பல்,  தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை உறுதிப்படுத்துகிறது.

 (Release ID: 2182188)

***

SS/BR/SH


(Release ID: 2182341) Visitor Counter : 11