பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான புதிய உதவி எண்ணை அறிவித்துள்ளது
Posted On:
24 OCT 2025 4:29PM by PIB Chennai
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குடிமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கும், ஆதரவு சேவைகளை அணுகுவதற்கும் ஏதுவாக, போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான கட்டணமில்லா உதவி எண்ணில் மாற்றத்தை அறிவித்துள்ளது. தற்போதுள்ள 14408 என்ற எண்ணுக்கு பதிலாக புதிய உதவி எண் 1515, 2025 நவம்பர் 1 முதல் பயன்பாட்டிற்கு வரும்.
இந்த மாற்றம், போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவி நாடும் பயனாளிகள் எளிதில் நினைவுகூர்ந்து அணுகுவதை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், புதிய எண்ணை தொடர்புகொள்வதில் சிறிது சிரமம் ஏற்படலாம். இக்காலத்தில், அழைப்பாளர்களால் புதிய எண் 1515 உடன் இணைக்க முடியவில்லை எனில், பழைய எண் 14408-ஐ தொடர்ந்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த உதவி எண் கேள்விகள், தகவல்கள் மற்றும் உதவிக்கான ஒற்றைத் தொடர்பு எண்ணாக தொடர்ந்து செயல்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையற்ற தகவல் தொடர்பு மற்றும் தடையற்ற ஆதரவை உறுதி செய்வதில் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
***
(Release ID: 2182173)
SS/SE/SH
(Release ID: 2182306)
Visitor Counter : 16