நிலக்கரி அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 5.0-ல் நிலக்கரி அமைச்சகத்தின் முன்னேற்றங்கள்
प्रविष्टि तिथि:
24 OCT 2025 3:34PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 5.0-ன் ஒரு பகுதியாக, நிலக்கரி அமைச்சகமும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும் தூய்மை, செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்த இயக்கத்தின் சாதனைகளாக, 68,04,087 லட்சம் சதுர அடி நிலம் தூய்மை படுத்தப்பட்டுள்ளது. 5,813 மெட்ரிக் டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு, ரூ. 22.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு நீக்கப்பட்டன. சிறந்த நடைமுறைகளாக, 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் யோகா மையமாக மீட்டெடுக்கப்பட்டது, தூய்மை குறித்த விழிப்புணர்வு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான பயிற்சித் தளம் மற்றும் இசை அறை போன்றவை உருவாக்கப்பட்டன. 'தூய்மை இந்தியா' என்ற இலக்குடன் இணைந்து நிலக்கரித் துறையின் உறுதிபாட்டை இந்த முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182130
***
SS/SE/SH
(रिलीज़ आईडी: 2182294)
आगंतुक पटल : 18