பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு சிறப்பான எச்சரிக்கையை அளித்தது, இதனால் இனி இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு தவறான செயலையும் முயற்சிக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை அந்நாடு யோசிக்கும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
23 OCT 2025 9:02PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூரின் போது நமது ஆயுதப்படைகள் பாகிஸ்தானுக்கு சிறப்பான எச்சரிக்கையை அளித்துள்ளதால், இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு தவறான செயலையும் முயற்சிப்பதற்கு முன்பு பாகிஸ்தான் இப்போது இருமுறை யோசிக்கும் என பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அக்டோபர் 23, 2025 அன்று ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெற்ற படா கானா நிகழ்வின் போது வீரர்களுடன் உரையாடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆபரேஷன் இன்னும் முடிவடையவில்லை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், பாகிஸ்தான் ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். "நமது விமானிகள், பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பலத்தின் மாதிரி செயல்பாட்டை மட்டுமே வெளிப்படுத்தினர். வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் நம் உண்மையான பலத்தையும் வெளிப்படுத்த தயங்கமாட்டார்கள்," என்று அவர் கூறினார்.
நாட்டின் எதிரிகள் ஒருபோதும் செயலற்று இருப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகள் எப்போதும் விழிப்புடனும், தயாராகவும் இருக்க வேண்டும் என்றும், அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொருத்தமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து கொள்வதில் ஆயுதப்படைகள் வகிக்கக்கூடிய பங்கை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். “நமது வீரர்கள் எல்லைகளின் பாதுகாவலர்கள் மட்டுமல்ல, தேசத்தை நிர்மாணிக்கும் முன்னோடிகளும் கூட. இந்த நூற்றாண்டு, நம்முடையது, எதிர்காலம் நம்முடையது, மேலும் தன்னிறைவை நோக்கி நாம் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களுடன், நமது ராணுவம் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் சிறந்த ராணுவமாக மாறும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
எல்லை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் மேம்படுத்த எல்லை முழுவதும் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181978
***
SS/RB/RJ
(Release ID: 2182045)
Visitor Counter : 9