மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்தியா செயற்கை நுண்ணறிவை சமூக நலனுக்கான சக்தியாக பயன்படுத்த வேண்டும்: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
23 OCT 2025 7:26PM by PIB Chennai
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை மாநாடு 2025 குறித்த முன்னோட்ட நிகழ்வை புதுதில்லியில் அக்டோபர் 23, 2025 அன்று நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் பேசிய துறையின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்ப அலையை பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அந்த மாற்றத்தை இயக்கும் மிக முக்கியமான தொழில்நுட்பம் என்று குறிப்பிட்டார். மக்கள் செயற்கை நுண்ணறிவை அணுகி பயன்பெற உள்ளடக்கிய வழிமுறைகள் தேவை. 'சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு' என்ற இந்நிகழ்வின் கருப்பொருள் பொருத்தமாக உள்ளது என்று கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, பாரம்பரிய வளர்ச்சி தடைகளை தாண்டி சமூக-பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் சக்தி என்று இந்நிகழ்ச்சியில் பேசிய விஞ்ஞானி கவிதா பாட்டியா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181945
(வெளியீட்டு அடையாள எண்: 2181945))
***
SS/VK/SH
(रिलीज़ आईडी: 2181985)
आगंतुक पटल : 32