பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு கொள்முதல் கையேடு 2025-ஐ அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
Posted On:
23 OCT 2025 5:39PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று (அக்டோபர் 23, 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு கொள்முதல் கையேடு 2025-ஐ வெளியிட்டார். நவம்பர் 01, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கொள்முதல் கையேடு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முப்படைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் கொள்முதலை எளிதாக்கும்.
இந்தக் கையேட்டைத் திருத்தியமைத்ததற்காக பாதுகாப்புத் துறை மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், புதிய கையேடு, நடைமுறைகளை எளிதாக்கும், செயல்பாட்டில் சீரான தன்மையைக் கொண்டுவரும் மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் கொள்முதலில் நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை முறையாக உறுதி செய்யும் என்று குறிப்பிட்டார்.
நிதி ஆலோசகர் (பாதுகாப்பு சேவைகள்) டாக்டர் மயங்க் சர்மா, பாதுகாப்பு கொள்முதல் கையேடு 2025 பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதி, கடற்படைத் தலைவர், ராணுவத் தலைவர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுத் துறைச் செயலாளர், பாதுகாப்பு உற்பத்திச் செயலாளர், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர், விமானப் படைத் துணைத் தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181894
(Release ID: 2181894)
***
SS/BR/SH
(Release ID: 2181984)
Visitor Counter : 6