குடியரசுத் தலைவர் செயலகம்
ஸ்ரீ நாராயண குருவின் மனிதகுலத்திற்கான அன்பு, ஒருமைப்பாடு, சமத்துவம் போன்ற போதனைகள், தலைமுறைகளைக் கடந்து நம்பிக்கை அளிக்கிறது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
Posted On:
23 OCT 2025 1:52PM by PIB Chennai
ஸ்ரீ நாராயண குருவின் மனிதகுலத்திற்கான அன்பு, ஒருமைப்பாடு, சமத்துவம் போன்ற போதனைகள், தலைமுறைகளைக் கடந்து நம்பிக்கை அளிக்கிறது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், வர்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண குரு மகா சமாதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை அவர் இன்று (23.10.2025) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலைவர்களில் ஒருவராகவும், சமூக சீர்த்திருத்தவாதியுமாக திகழ்ந்த ஸ்ரீ நாராயண குரு நாட்டின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டதாக தெரிவித்தார்.
19-ம் நூற்றாண்டில் நாடு முழுவதும் விழிப்புணர்வு எற்படுத்துவதில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அவர் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் கடவுளின் தெய்வீகத்தன்மையை காண்பதாகவும், மனிதகுலத்திற்கு ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற சக்திவாய்ந்த போதனையை அளித்தவர் என்றும் குடியரசுத்தலைவர் புகழாரம் சூட்டினார். கண்மூடித்தனமான நம்பிக்கையை தவிர்த்து சகிப்புத்தன்மை மற்றும் ஞானத்தின் மூலம் உண்மையான விடுதலையை அடைய வேண்டும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்ததாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். சுயஒழுக்கம், எளிமை மற்றும் அனைவரின் மீது அன்பு செலுத்துவதை எப்போதும் அவர் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்வியறிவு, தன்னம்பிக்கை, நீதி குறித்த மாண்புகளை அறிந்துக்கொள்ளும் வகையில் கோயில்கள், பள்ளிகள் மற்றும் சமூக நிறுவனங்களை அவர் ஏற்படுத்தியிருந்ததாக குடியரசுத்தலைவர் கூறினார். மலையாளம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் எளிமையுடன் கூடிய ஆழ்ந்த தொலைநோக்கு பார்வையை ஸ்ரீ நாராயண குரு கொண்டிருந்ததாக அவர் கூறினார். மனித குலத்தின் வாழ்வு மற்றும் ஆன்மீகம் குறித்து அவரது செயல்பாடுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181784
***
(Release ID: 2181784)
SS/SV/AS/SH
(Release ID: 2181944)
Visitor Counter : 6