PIB Headquarters
தீன்தயாள் ஏழைகள் நலத்திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்
Posted On:
23 OCT 2025 10:24AM by PIB Chennai
கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு சுயவேலைவாய்ப்பு அல்லது வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் வறுமையை அகற்றும் வகையில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமாக தீன்தயாள் ஏழைகள் நலத்திட்டம் அமைந்துள்ளது. ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் பயனடையும் வகையிலும், அவர்களது வருவாயை அதிகரிக்க செய்வதற்கான பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், உலகளவில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தின் மேம்பாட்டுக்காக மிகப்பெரிய முன்முயற்சியாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 10.5 கோடி கிராமப்புற மகளிர் குழுமங்களை 90.9 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களாக இத்திட்டம் ஒருங்கிணைந்துள்ளது.
தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 3.74 லட்சம் நிறுவனங்கள் மற்றும் 4.6 கோடி மகளிர் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17.5 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற நிதிசார் மேம்பாட்டை அதிகரிக்கவும், கடனுதவி வழங்கும் வகையிலும் 47,952 வங்கிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விவசாயம், மரங்கள் சாராத வன உற்பத்திப்பொருட்கள், கால்நடைகள் மற்றும் வேளாண் சாராத நிறுவனங்களுக்கு நீடித்த வாழ்வாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181702
***
(Release ID: 2181702)
SS/SV/AS/SH
(Release ID: 2181764)
Visitor Counter : 17