பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடி தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க பழங்குடியின வணிக மாநாடு 2025 நவம்பர் 12 அன்று நடைபெறவுள்ளது
Posted On:
22 OCT 2025 3:51PM by PIB Chennai
பழங்குடி தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க பழங்குடியின வணிக மாநாடு 2025 நவம்பர் 12 அன்று புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் நடைபெறவுள்ளது. தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து 2025 அக்டோபர் 17 அன்று நடத்திய ஆதி கர்மயோகி திட்டம் குறித்த தேசிய மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பழங்குடியின வணிக மாநாடு 2025-க்கான இலச்சினை, நிகழ்ச்சிக் குறிப்பு, டிஜிட்டல் தளங்கள் ஆகியவை வெளியிடப்பட்டன.
பழங்குடியினர் நல அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் எம்எஸ்எம்இ, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, ஜவுளி உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களும் பங்கேற்க உள்ளன.
பாரம்பரிய அறிவை நவீன வணிக நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து அடித்தள நிலையிலான புத்தாக்கங்களை தேசிய மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடரில் இணைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற மத்திய அரசின் உறுதியான தீர்மானத்திற்கு அடித்தள நிலையில் உள்ள புதிய கண்டுபிடிப்பாளர்களும் தொழில் முனைவோரும் அதன் மையமாக இருக்க வேண்டும் என்பதை இந்த மாநாடு எதிரொலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181508
***
SS/SMB/KPG/SH
(Release ID: 2181641)
Visitor Counter : 10