அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர் – தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 10-வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடியது
प्रविष्टि तिथि:
21 OCT 2025 11:46AM by PIB Chennai
சிஎஸ்ஐஆர் – தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 2025 அக்டோபர் 17 அன்று 10-வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடியது. நீடித்த மற்றும் இயற்கை வாழ்வில் சுகாதார நலனுக்கான முழுமையான அணுகுமுறையாக ஆயுர்வேதத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிஎஸ்ஐஆர் – தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து புதுதில்லியில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் கிஷோர் படேல் எடுத்துரைத்தார். நோய்களுக்கான காரணம், சரிவிகித ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181104
***
SS/IR/KPG/SG
(रिलीज़ आईडी: 2181217)
आगंतुक पटल : 15