மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களவைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 19 OCT 2025 7:11PM by PIB Chennai

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு பிர்லா தமது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

“தீபாவளி திருநாளான இன்று அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வரவிருக்கும் கோவர்தன் பூஜை மற்றும் பாய் தூஜ் பண்டிகைகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி திருநாள் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளின் ஆன்மாவாகும். இது தீபங்களை ஏற்றி கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் மட்டுமல்லாமல், இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு, விரக்தியின் மீது நம்பிக்கை ஆகியவற்றின் வெற்றியின் செய்தியாகும்.

பகவான் ஸ்ரீ ராமர், மதிப்புகள், நீதி மற்றும் தர்மத்தின் பாதையைப் பின்பற்றுவதன் மூலம், நம் சொந்த வாழ்க்கையில் உண்மை, கடமை மற்றும் நல்லெண்ணத்தை நிலைநிறுத்த நம்மை ஊக்குவிக்கும் லட்சியங்களை ஏற்படுத்தினார்.  தீபாவளி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான நேரம் மட்டுமல்ல, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவுமான ஒரு நேரமாகும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் ஒளியைப் பரப்ப நாம் பாடுபட வேண்டும்.

நமது சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்த இந்தப் புனிதமான பண்டிகையில் உறுதிமொழி ஏற்போம். நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அதிகாரம் பெறட்டும், நமது வணிக சமூகம் செழிக்கட்டும், நமது இளைஞர்கள் உற்சாகமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கட்டும், நமது தேசம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும்.

லட்சுமி தேவி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும்.  சரஸ்வதி தேவி உங்களுக்கு அறிவையும் ஞானத்தையும் அருளட்டும். மேலும் விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்கி நல்வாழ்வுக்கு வழி வகுக்கட்டும்.

உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஜெய் சியாராம்! ”

***

AD/PKV/SH


(Release ID: 2180913) Visitor Counter : 4